ADDED : அக் 27, 2025 09:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெகமம்: நெகமம் துணை மின் நிலையத்தில் இன்று அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நெகமம் துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட நெகமம், ஆவலப்பம்பட்டி, கொண்டேகவுண்டம்பாளையம், சின்னநெகமம், ராமச்சந்திராபுரம், காட்டம்பட்டி, அரசூர், மொகவனூர், வி.வேலூர், மூங்கில்தொழுவு ஆகிய பகுதிகளில் இன்று (28ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் தடை அறிவிக்கப்பட்டிருந்தது.
மழை பெய்வதால், நெகமம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல் மின்வினியோகம் இருக்கும் என, நெகமம், செயற்பொறியாளர், சங்கர் தெரிவித்தார்.

