/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் பிரதோஷம்
/
வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் பிரதோஷம்
ADDED : நவ 18, 2025 03:20 AM

மேட்டுப்பாளையம்: கார்த்திகை மாத சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷ நாளில் வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு, சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடைபெறும். கார்த்திகை மாதம் முதல் நாள் திங்கட்கிழமை வந்ததால், சோமவார பிரதோஷ பூஜைகள் நடந்தன. வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு, பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், பன்னீர், இளநீர் உள்பட 16 வகை வாசனை திரவியங்களால், அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். சிறப்பு பூஜையை பூசாரி ஜோதி வேலவன் செய்தார். வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

