/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உலக அமைதிக்கான பிரார்த்தனை நடக்குது!
/
உலக அமைதிக்கான பிரார்த்தனை நடக்குது!
ADDED : செப் 20, 2024 10:13 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், உலக அமைதிக்கான பிரார்த்தனை நிகழ்ச்சி நாளை (22ம் தேதி) நடக்கிறது.
'பொள்ளாச்சி ஹார்ட்புல்னெஸ் தியான மையம்' சார்பில், உலக சமாதான தினத்தையொட்டி உலக அமைதிக்காக பல்வேறு சமயத்தினர், ஆன்மிக அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் பிரார்த்தனை நிகழ்ச்சி, மாக்கினாம்பட்டியில் உள்ள ஹார்ட்புல்னெஸ் தியான மையத்தில் நாளை (22ம் தேதி) நடக்கிறது.
காலை, 9:30 முதல், 11:30 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று, உலக அமைதிக்கான பிரார்த்தனையில் ஈடுபடலாம். அனுமதி இலவசம்; முன்பதிவு அவசியமாகும். இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு, 96326 03407 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளாலாம், என, அந்த அமைப்பினர் தெரிவிதத்னர்.