/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கர்ப்பிணி ரத்த மாதிரி தவறான அறிக்கை; ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு
/
கர்ப்பிணி ரத்த மாதிரி தவறான அறிக்கை; ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு
கர்ப்பிணி ரத்த மாதிரி தவறான அறிக்கை; ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு
கர்ப்பிணி ரத்த மாதிரி தவறான அறிக்கை; ரூ.50,000 இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : ஜூன் 13, 2025 11:14 PM

கோவை; கர்ப்பிணியின் ரத்த மாதிரி குறித்து தவறான அறிக்கை கொடுத்த பரிசோதனை மையம், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
கோவை, காந்திபுரம், நுாறடி ரோட்டை சேர்ந்தவர் சிந்து,30; கர்ப்பிணியாக இருந்த இவர், மருத்துவர் அறிவுறுத்தல் பேரில், 2024 மார்ச் 23ல், காந்திபுரத்திலுள்ள 'டிவைன் டிஜிட்டல் டயாக்னாஸ்டிக்ஸ்' என்ற மையத்தில், ரத்த மாதிரியை பரிசோதனைக்கு கொடுத்தார்.
கோவையிலிருந்து ரத்த மாதிரியை, சென்னையிலுள்ள 'நியூபெர்க்' என்ற பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை அறிக்கையில், சிந்துவுக்கு 'ஓ பாசிட்டிவ்' ரத்த வகை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து சிந்து அதிர்ச்சியடைந்தார்.
ஏற்கனவே, பல்வேறு பரிசோதனை மையத்தில், ரத்த மாதிரி எடுத்து போது, அவருக்கு 'ஓ நெகடிவ்' ரத்த வகை என்று கொடுக்கப்பட்டு இருந்தது.
குழப்பம் அடைந்த சிந்து, பீளமேட்டிலுள்ள மற்றொரு பரிசோதனை மையத்தில், மீண்டும் ரத்த மாதிரி கொடுத்தார்.
அப்போதும், 'ஓ நெகடிவ்' என்று அறிக்கை வந்தது. காந்திபுரத்திலுள்ள பரிசோதனை மையம் தவறான அறிக்கை கொடுத்ததால், மனஉளைச்சலுக்கு ஆளானார்.
கருவுற்ற நிலையில், அதன் முக்கியத்துவம் அறிந்து முறையாக பரிசோதனை செய்யாமல் தவறான அறிக்கை கொடுத்ததால், இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர்கள் கவனக்குறைவுடன் செயல்பட்டு, சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 50,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.
கோவையிலிருந்து ரத்த மாதிரியை, சென்னையிலுள்ள 'நியூபெர்க்' என்ற பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை அறிக்கையில், சிந்துவுக்கு 'ஓ பாசிட்டிவ்' ரத்த வகை என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து சிந்து அதிர்ச்சியடைந்தார். ஏற்கனவே, பல்வேறு பரிசோதனை மையத்தில், ரத்த மாதிரி எடுத்து போது, அவருக்கு 'ஓ நெகடிவ்' ரத்த வகை என்று கொடுக்கப்பட்டு இருந்தது.