/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகப்பேறு மருத்துவர் இல்லை கர்ப்பிணிகள் கடும் பாதிப்பு
/
மகப்பேறு மருத்துவர் இல்லை கர்ப்பிணிகள் கடும் பாதிப்பு
மகப்பேறு மருத்துவர் இல்லை கர்ப்பிணிகள் கடும் பாதிப்பு
மகப்பேறு மருத்துவர் இல்லை கர்ப்பிணிகள் கடும் பாதிப்பு
ADDED : மே 26, 2025 10:46 PM
வால்பாறை, ; அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர் இல்லாததால், கர்ப்பிணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை மலைப்பகுதியில் உள்ள பல்வேறு தேயிலை எஸ்டேட்களில், பெண் தொழிலாளர்கள் அதிகளவில் பணிபுரிகின்றனர். பெண்கள் பிரசவ காலங்களில் வால்பாறை நகரில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்கின்றனர். அவர்களுக்கு இங்குள்ள அரசு மருத்துவமனைகளிலேயே பிரசவம் பார்க்கப்படுகிறது.
இதனால், கர்ப்பிணிகள் கவலையில்லாமல் இருந்தனர். அரசு மருத்துவமனைகளில் குழந்தை பிறப்பும் அதிகமாக நடந்தது. இந்நிலையில், வால்பாறை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த மகப்பேறு மருத்துவர் பணி மாற்றம் செய்யப்பட்டார்.
கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களே பிரசவம் பார்க்கின்றனர். சில நேரங்களில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள், பிரசவ காலங்களில் அரசு மருத்துவமனைகளை நம்பியே உள்ளனர். தற்போது, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மகப்பேறு மருத்துவர் இல்லாததால் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள டாக்டர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,' என்றனர்.