/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரதமர் சூரிய மின்சக்தி திட்டம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
/
பிரதமர் சூரிய மின்சக்தி திட்டம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
பிரதமர் சூரிய மின்சக்தி திட்டம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
பிரதமர் சூரிய மின்சக்தி திட்டம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 23, 2025 02:49 AM
போத்தனுார்: பிரதமர் சூரிய மின்சக்தி திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம், கோவை ஆத்துப்பாலம் அருகே நேற்று நடந்தது. 5 நிறுவன பிரதிநிதிகள் சோலார் மின் தகடுகள் அமைப்பது குறித்து விளக்கினர்.
உதவி இன்ஜி., உமா மகேஸ்வரி கூறுகையில், ''வீடுகளில் ஒன்று முதல் ஒன்பது கிலோ வாட் வரை சூரிய மின் உற்பத்திக்கான அமைப்பு உருவாக்கலாம். ஒரு கிலோ வாட் வரை அமைக்க, 75 ஆயிரம் ரூபாய் செலவாகும்; ரூ.30 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். அதிகபட்சம், 78 ஆயிரம் மானியம் தரப்படும்.
சூரிய மின் சக்தி பயன்படுத்தும்போது, மின் கட்டணம், 50 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. ஒரு மாதத்தில் உபயோகித்தது போக மீதி, அடுத்த மாத கணக்கீட்டில் சேர்த்துக்கொள்ளப்படும். ஓராண்டு வரை அதிகபட்ச உற்பத்தியை கணக்கில் வைத்து, பயன்படுத்த முடியும். இதற்கென தனி மீட்டர் பொருத்தப்படும்,'' என்றார்.
உதவி இன்ஜி., உமா பார்வதி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். இதேபோல், குறிச்சி ஹவுசிங் யூனிட், ஈச்சனாரி, மதுக்கரை நகராட்சி பகுதிகள், வெள்ளலுார் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிப்போருக்கும் முகாம் நடந்தது.