/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மதவாத கருத்துக்களை பதிவிட்டவருக்கு சிறை
/
மதவாத கருத்துக்களை பதிவிட்டவருக்கு சிறை
ADDED : ஏப் 14, 2025 11:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; மதவாத கருத்துகளை சமூக வலைதளத்தில், பதிவிட்டவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
கோவை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி, 50. அங்குள்ள கிளை நுாலகத்தில் நுாலகராக பணிபுரிந்து வருகிறார். இவர் சமூக வலைதளத்தில், மதவாத கருத்துக்களை பதிவு செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், எஸ்.டி.பி.ஐ., கட்சியினர், போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து, மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் புகார் உண்மை எனத் தெரிந்தது. சுந்தரமூர்த்தியை போலீசார் சிறையில் அடைத்தனர்.