/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விதிமீறும் தனியார் பஸ்கள் வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
/
விதிமீறும் தனியார் பஸ்கள் வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
விதிமீறும் தனியார் பஸ்கள் வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
விதிமீறும் தனியார் பஸ்கள் வாகன ஓட்டுநர்கள் தவிப்பு
ADDED : ஆக 22, 2025 11:38 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகரில் இயக்கப்படும் சில தனியார் பஸ்கள், சந்திப்பு ரோட்டை மறித்து நிறுத்தப்படுவதால், பிற வாகன ஓட்டுநர்கள் பரிதவிக்கின்றனர்.
பொள்ளாச்சி நகரில் இருந்து சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு அரசு டவுன் பஸ் மட்டுமின்றி, தனியார் பஸ்களும் இயக்கப்படுகின்றன. சில ஓட்டுநர்கள், சீருடை அணியாமல் பஸ்சை இயக்குவதுடன், தேவையின்ற 'ஹாரன்' ஒலிக்கச் செய்து, வேகமாக பஸ்சை இயக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இது ஒருபுறமிருக்க, பல பகுதிகளில் சந்திப்பு ரோட்டை ஒட்டிய திருப்பங்களிலேயே பஸ் ஸடாப் உள்ள நிலையில், பிற வாகனங்களுக்கு இடையூறாக பஸ்சை நிறுத்தி பயணியரை ஏற்றி, இறக்குகின்றனர்.
வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:
ஆனைமலை, ஆழியாறு, மீனாட்சிபுரம் உள்ளிட்ட பல வழித்தடங்களில் தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. சில ஓட்டுநர்கள், அதிவேகமாக பஸ்சை இயக்குவது, முன்னால் செல்லும் வாகனங்களை விதிமீறி முந்திச் செல்ல முற்படுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அதிலும், சிலர், பஸ் ஸ்டாப் உள்ள பகுதிகளில், நடுரோட்டிலேயே பஸ்சை நிறுத்துகின்றனர். குறிப்பாக, சந்திப்பு ரோடுகளில் இருந்து பிற வாகனங்கள் செல்ல முடியாதவாறு, பஸ்சை நிறுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
திருவள்ளுவர் திடல், ஓம்பிரகாஷ், தங்கம், வஞ்சியாபுரம் பிரிவு, ஜமீன்ஊத்துக்குளி, அம்பராம்பாளையம் சுங்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் இத்தகைய விதிமீறல் தொடர்கிறது. அவ்வபோது, துறை ரீதியான அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.