UPDATED : நவ 04, 2026 10:29 AM
ADDED : நவ 04, 2026 10:26 AM
அ நிறம் | அளவு
கோவை: உக்கடம், பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் பாரூக்,31; திராவிடர் கழக உறுப்பினரான இவர், 2017 மார்ச் 16ல் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கடவுள் மறுப்பு கொள்கை கருத்துக்களை பேஸ்புக்கில் பதிவிட்டதால் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிந்தது. இது தொடர்பாக, போத்தனூரை சேர்ந்த சதாம் உசேன், சம்சுதீன், அன்சாத், அக்ரம் ஜிந்தா, ஜாபர் அலி, அப்துல் முனாப் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது, மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, 9 ஆண்டுகளாக சாட்சி விசாரணை நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட 6 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
