/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளைபொருட்கள் இருப்பு; ரூ.8 கோடி பொருளீட்டுக்கடன்
/
விளைபொருட்கள் இருப்பு; ரூ.8 கோடி பொருளீட்டுக்கடன்
ADDED : அக் 02, 2025 12:01 AM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாயிலாக, விவசாயிகளுக்கு, 8 கோடி ரூபாய்க்கு பொருளீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனை கூடம் வாயிலாக, விவசாயிகள் பலர் கொப்பரை உள்ளிட்ட விளைபொருட்களை விற்பனை செய்கின்றனர். இதில் சிலர் விற்பனை கூடத்தில் உள்ள கிடங்கில் விளைபொருளை இருப்பு வைத்து விலையேற்றத்தின் போது விற்கின்றனர்.
தற்போது, ஒழுங்குமுறை விற்பனை கூட கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் வாயிலாக, பதிவு செய்யப்பட்ட கிடங்குகளில், இருப்பு வைக்கப்பட்டுள்ள விளை பொருட்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வாயிலாக, ஒன்பது பேருக்கு, 8 கோடி ரூபாய்க்கு பொருளீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், விற்பனை கூடத்தின் வாயிலாக, 18 விவசாயிகளுக்கு, 5 சதவீதம் வட்டியில், 90 லட்சம் பொருளீட்டுக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவலை, கோவை விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆறுமுகராஜன் மற்றும் கிணத்துக்கடவு விற்பனை கூட கண்காணிப்பாளர் செல்வராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.