ADDED : அக் 03, 2025 09:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, திவான்சாபுதுார் ஊராட்சி மற்றும் சிங்காநல்லுார் ஊராட்சிகளில், ஒரு கோடியே, 62 லட்சத்து, 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், பல்வேறு திட்டப்பணிகள் துவக்க விழா நடந்தது. பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி தலைமை வகித்தார். தி.மு.க. கோவை தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலை வகித்தார். அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழாவில், நபார்டு திட்டத்தில் கிராம சாலைகள் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை, நிறைவடைந்த கட்டுமானங்கள் திறக்கப்பட்டன.