ADDED : செப் 12, 2025 10:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவையில் சொத்துவரி செலுத்த இன்றும், நாளையும் சிறப்பு வரி வசூல் முகாம் நடக்கிறது.
கிழக்கு மண்டலம், 55வது வார்டு எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, மேற்கு மண்டலம், 38வது வார்டு கல்வீராம்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, 16வது வார்டு காமராஜர் நகர் டி.வி.எஸ். நகர் வார்டு அலுவலகத்திலும் நடக்கிறது.
வடக்கு மண்டலம், 15வது வார்டு சுப்பிரமணியம்பாளையம் அங்கன்வாடி மையம், 25வது வார்டு காந்தி மாநகர் வார்டு அலுவலகம் (விநாயகர் கோவில் அருகே), தெற்கு மண்டலம், 92வது வார்டு, பி.கே. புதுார் விநாயகர் கோவில் இடம்பெறுகிறது.
மத்திய மண்டலம், 63வது வார்டு ராமநாதபுரம் மாநகராட்சி வணிக வளாகத்திலும் நடக்கிறது. காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை முகாம் நடக்கும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.