தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கரப்பான் பூச்சி கட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கரப்பான் பூச்சி கட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கரப்பான் பூச்சி கட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்


ADDED : அக் 22, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 22, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்: 'கரப்பான் பூச்சி கட்சியை தடை செய்ய வேண்டும்,' என, வலியுறுத்தி, தேச பக்தர்கள் பேரவை சார்பில் அன்னூரில் இன்று (அக்.,22) ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேச விரோத கரப்பான் பூச்சி கட்சியை தடை செய்ய கோரி தேசபக்தர்கள் பேரவை சார்பில், இன்று மாலை அன்னூர் பயணியர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் பேசுகையில், காங்கிரஸின் 50 ஆண்டு கால ஆட்சியால் இந்தியா மோசமான நிலைக்கு சென்றது. கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் மோடி இந்தியாவை உலகில் தலை நிமிர வைத்துள்ளார்.

வெளிநாட்டைச் சேர்ந்த தீய சக்திகள் உள்நாட்டில் உள்ள சில சக்திகளுக்கு நிதி உதவி தந்து தூண்டிவிட்டு பிரதமர் மோடிக்கு எதிராகவும் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் செயல்பட வைக்கின்றனர். அப்படி ஒரு சக்திதான் கரப்பான் பூச்சி கட்சி எனும் சி.ஜே.பி., கட்சி, என்றார்.

ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் பேசுகையில், ‘தமிழகத்தில் தி.மு.க., மற்றும் கம்யூ., கட்சிகள் கரப்பான் பூச்சி கட்சியை பயன்படுத்தி த.வெ.க., அரசை கவிழ்க்க முயற்சிக்கின்றன. அதேபோல் மத்தியில் உள்ள மோடி அரசுக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்ய பயன்படுத்துகின்றன. இந்திய இறையாண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் சி.ஜே.பி., கட்சி எங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் அங்கு தேசபக்தர்கள் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். நேரடியாக பா.ஜ.,வின் மத்திய அரசை எதிர்க்க முடியாத பல சக்திகள் கரப்பான் பூச்சி கட்சிக்கு பின்புறம் இருந்து இயக்குகின்றன. மத்திய அரசு அந்த சக்திகளை இரும்பு கரம் கொண்டு அடக்குகிறது. நாம் அந்த தேச விரோத சக்தியை ஒழிப்பதற்கு மத்திய அரசுக்கு துணை நிற்க வேண்டும்,’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில செயலாளர் தங்கவேல், பா.ஜ., அறிவு சார் பிரிவு மாநில செயலாளர் ஜெயபால், பா.ஜ., விவசாய அணி மாவட்ட தலைவர் வெள்ளியங்கிரி, மாநில செயற்குழு உறுப்பினர் விஜயகுமார் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us