/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முட்டை கோழிப்பண்ணை துவக்க எதிர்ப்பு; மக்கள் உண்ணாவிரதம்
/
முட்டை கோழிப்பண்ணை துவக்க எதிர்ப்பு; மக்கள் உண்ணாவிரதம்
முட்டை கோழிப்பண்ணை துவக்க எதிர்ப்பு; மக்கள் உண்ணாவிரதம்
முட்டை கோழிப்பண்ணை துவக்க எதிர்ப்பு; மக்கள் உண்ணாவிரதம்
ADDED : ஏப் 02, 2025 10:22 PM

சூலுார்; சுல்தான்பேட்டை அருகே முட்டை கோழிப்பண்ணை துவக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.
சுல்தான்பேட்டை ஒன்றியம், ஜே. கிருஷ்ணாபுரம் மற்றும் வஞ்சிபுரம் கிராமத்தில், 12 ஏக்கர் பரப்பளவில் முட்டை கோழிப்பண்ணை துவங்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு சுற்றுவட்டார மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இரு தரப்புக்கும் இடையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை.
இந்நிலையில், முட்டை கோழிப்பண்ணை துவக்க எதிர்ப்பு தெரிவித்து, வஞ்சிபுரத்தில் தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை அப்பகுதி மக்கள், விவசாயிகள், அரசியல் கட்சியினர் நேற்று துவக்கினர்.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது:
முட்டை கோழிப்பண்ணை அமைந்தால், பல நோய் தொற்றுகள் ஏற்படும். துர்நாற்றம் காற்றில் கலந்து சுவாசக்கோளாறு ஏற்படும். கழிவுகளால் நிலத்தடி நீர் மாசுபடும். உணவு பொருட்கள், தண்ணீரில் ஈக்கள் அமர்வதால், மனிதர்கள் மட்டுமல்லாது கால்நடைகளும் பாதிக்கப்படும். அதனால், முட்டை கோழிப்பண்ணை துவக்க எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். அரசும் கண்டு கொள்ளாமல் உள்ளதால், தொடர் காத்திருப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி உள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

