/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாயில் கறுப்பு துணி கட்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம்
/
வாயில் கறுப்பு துணி கட்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 01, 2025 07:00 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை மண்டலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி போக்குவரத்து கழக கிளை 2 முன் நடந்தது.
கோவை மண்டல தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் அங்கமுத்து, வேலுச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மாநிலக்குழு உறுப்பினர்கள் வடிவேல், காளிமுத்து பேசினர். மண்டல துணை பொதுச்செயலாளர் சேதுராமன், கோரிக்கைகள் குறித்து பேசினார். மண்டல நிர்வாகி உமா நன்றி கூறினார்.
அதில், 109 மாத நிலுவையுடன் பயணப்படி உயர்வு, 21 மாத காலப்பணப்பலன்கள், ஓய்வு பெறும் நாளில் பணப்பலன்கள், பழைய பென்சன் திட்டம் செயல்படுத்த வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

