/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
/
வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 23, 2025 10:57 PM

மேட்டுப்பாளையம், ; தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை, நிறைவேற்றக்கோரி சத்துணவு ஊழியர் சங்கத்தினர், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க, காரமடை கிளையின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு காரமடை கிளைத் தலைவர் ஆனந்தி தலைமை வகித்தார்.
செயலாளர் சிந்துஜா முன்னிலை வைத்தார். மாநிலத் துணைத் தலைவர் பிரகலதா, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் வீரபத்திரன், சத்துணவு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் ராஜப்பன் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
சமையல் உதவியாளர் நியமனத்திற்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதை திருத்தம் செய்து, பழைய முறை கல்வித் தகுதியை அரசாணையாக வெளியிட வேண்டும்.
தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சத்துணவு மையங்களில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பேசினர்.
இதில் 70-க்கும் மேற்பட்ட சத்துணவு பணியாளர்கள் பங்கேற்றனர். பொருளாளர் தேவகி நன்றி கூறினார்.