/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தனியார் மதுபான கூடத்தை அகற்ற கோரி போராட்டம்
/
தனியார் மதுபான கூடத்தை அகற்ற கோரி போராட்டம்
ADDED : செப் 27, 2024 11:08 PM

ஆனைமலை,: தமிழக - கேரளா எல்லையில் உள்ள மீனாட்சிபுரத்தில், டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்நிலையில், அதே பகுதியில் தனியார் மதுபானக்கூடம் (எப்.எல்.,2) திறக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக நாடார் சங்கம் சார்பில் மீனாட்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க நிர்வாகிகள், பெண்களுடன் பங்கேற்று மீனாட்சிபுரம் ரோட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். மதுபான கூடத்தை இடமாற்றம் செய்ய கோரி கோஷமிட்டனர்.
சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் கூறுகையில், 'டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற கோரிக்கை விடுத்து வரும் நிலையில், புதிதயாக ஒரு எப்.எல்.,2 பார் துவங்கியுள்ளதுவேதனையாக உள்ளது. இதனால், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்படுவர். மாநில எல்லலைப்பகுதியான இங்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
இங்கு பள்ளிக்கூடம் உள்ள சூழலில், மதுபான கூடத்தை தடுக்க வேண்டும். இதற்குரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும்,' என்றனர்.
தொடர்ந்து, போலீசார் பேச்சு நடத்தியதைடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்துசென்றனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.