தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சாடிவயல் யானை முகாமில் பொதுமக்களுக்கு அனுமதி

சாடிவயல் யானை முகாமில் பொதுமக்களுக்கு அனுமதி

சாடிவயல் யானை முகாமில் பொதுமக்களுக்கு அனுமதி


ADDED : அக் 16, 2026 10:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 16, 2026 10:19 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாடிவயல்: போளுவாம்பட்டி வன சரகத்துக்கு உட்பட்ட சாடிவயல் வனத்தில், 50 ஏக்கர் பரப்பில் யானைகள் முகாம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது.

முதுமலை மற்றும் டாப்சிலிப்பில் இருந்து, முத்து, 24, காவேரி, 17, ஜான், 36, சுமங்களா, 38 ஆகிய 4 கும்கி யானைகள் இங்கு கொண்டு வரப்பட்டன. முகாம் திறந்து 10 மாதம் ஆகியும், சுற்றுலா பயணிகள் பார்க்க அனுமதி தராமல் இருந்தனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்று, நேற்று முதல் யானைகளை பார்க்க வனத்துறை அனுமதி வழங்கியது. காலை, 8:30 முதல் 9:30 மணி வரையும், மாலை, 4:30 முதல் 5:30 மணி வரையும் பொதுமக்கள் வரலாம்.

சிறுவர்களுக்கு 20 ரூபாய், பெரியவர்களுக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். முதல் நாளான நேற்று, காலையும், மாலையும் ஏராளமான பொதுமக்கள் குடும்பத்துடன் வந்து, யானைகளை பார்வையிட்டு சென்றனர்.

யானைகளின் குண நலன்கள், வாழ்வியல் குறித்து, வனத்துறையினர் பொதுமக்களுக்கு விளக்கினார்கள். அந்த நேரத்தில், யானைகளுக்கு உணவளிப்பதை மக்கள் பார்க்கலாம். ஆனால் யானைகளுக்கு மக்கள் உணவு கொடுக்க கூடாது. யானைகள் குறித்த விவரங்களை காட்டும் போர்டு வைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், முகாமை திறந்து வைக்கிறோம்என்று வனத்துறை அதிகாரிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us