/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் ஆதார குட்டையில் கழிவுநீர் கலப்பு :பொதுமக்கள் புகார்
/
குடிநீர் ஆதார குட்டையில் கழிவுநீர் கலப்பு :பொதுமக்கள் புகார்
குடிநீர் ஆதார குட்டையில் கழிவுநீர் கலப்பு :பொதுமக்கள் புகார்
குடிநீர் ஆதார குட்டையில் கழிவுநீர் கலப்பு :பொதுமக்கள் புகார்
ADDED : அக் 26, 2025 11:28 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, சேரிபாளையத்தில் குடிநீர் ஆதார குட்டையில், தென்னை நார் கழிவுநீர் கலப்பதையும், தண்ணீர் திருடுவதையும் தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆண்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சேரிபாளையத்தில் உள்ள குட்டையில், தென்னை நார் கழிவுநீர் கலப்பதால், குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாகவும், அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கூறியதாவது:
ஆண்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சேரிபாளையத்தில் அமைந்துள்ள குட்டையில் இருந்து, கப்பாளங்கரை வரை ஒன்பது குட்டைகளில், 15 கோடி லிட்டர் அளவுக்கு தண்ணீரை தேக்கி வைத்துள்ளோம்.
எங்களது ஊர் குட்டை முதல் குட்டையாகும். இந்த குட்டைக்கு அருகே தனியார் தென்னை நார் தொழிற்சாலை அமைந்துள்ளது.இந்த தொழிற்சாலைக்கு குட்டையில் இருந்து தண்ணீர் 'பம்ப்' செய்து பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மீண்டும் குட்டைக்கு திரும்பி விடப்படுகிறது.
இந்த கழிவுநீர், ஒன்பது குட்டைகளிலும் கலந்து விட்டது. இந்த கழிவுநீர், விவசாய கிணறுகள், போர்வெல்களில் உட்புக துவங்கியுள்ளது.குடிநீர் ஆதாரத்தில் கழிவுநீர் கலப்பதால் பாதிப்பு ஏற்படும்.
எனவே, இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர், சுற்றுச்சூழல் துறை அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு, கூறினர்.

