/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எம்.பி.,யை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆவேசம்
/
எம்.பி.,யை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆவேசம்
ADDED : ஜூன் 10, 2025 09:41 PM

ஆனைமலை; ஆனைமலை அருகே, பொள்ளாச்சி எம்.பி.,யை, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனைமலை அருகே, கெங்கம்பாளையம் ஊராட்சியில், அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட பூமி பூஜை நேற்று நடந்தது. அதில், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அங்கு வந்த பொதுமக்கள், எம்.பி.,யை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.
பொதுமக்கள் பேசுகையில், 'சாக்கடை கால்வாய்களில், கழிவுநீர் முறையாக செல்ல கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பையை முறையாக அகற்றுவதில்லை. குடிநீர், 10 நாளுக்கு ஒரு முறை தான் வினியோகிக்கப்படுகிறது.
பூமி பூஜைக்கு வந்தால் நீங்களும் அப்படியே சென்று விடுவதால் எங்களது பிரச்னைக்கு தீர்வு கிடைப்பதில்லை. ஒரு முறையாவது ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
இதற்கு எம்.பி., மற்றும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.