/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவ முகாம் மக்கள் பங்கேற்பு
/
மருத்துவ முகாம் மக்கள் பங்கேற்பு
ADDED : ஆக 01, 2025 07:21 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கோவை தெற்கு மாவட்டம், பொள்ளாச்சி நகரம் சார்பில் இலவச மருத்துவ முகாம், ஜோதிநகர் பிரஸ் காலனியில் நடந்தது. நகரத் தலைவர் சிக்கந்தர் தலைமை வகித்தார், மாவட்ட பொருளாளர் சாகுல்ஹமீது முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் எம்.இ.சாகுல்ஹமீது, மாவட்ட துணைத் தலைவர் முஸ்தபா, சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு, நோய் பாதிப்புக்கு ஏற்ப சிகிச்சை பெறுவதற்கு டாக்டர்கள் அறிவுறுத்தினர். ஒன்றிய பொறுப்பாளர், மாநில துணைத் தலைவர் ரஷீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.