/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் குழாய் உடைப்பை சீரமைப்பதில்லை அலட்சியத்தால் பொது மக்கள் வேதனை
/
குடிநீர் குழாய் உடைப்பை சீரமைப்பதில்லை அலட்சியத்தால் பொது மக்கள் வேதனை
குடிநீர் குழாய் உடைப்பை சீரமைப்பதில்லை அலட்சியத்தால் பொது மக்கள் வேதனை
குடிநீர் குழாய் உடைப்பை சீரமைப்பதில்லை அலட்சியத்தால் பொது மக்கள் வேதனை
ADDED : மார் 06, 2024 01:20 AM

உடுமலை;உடுமலை அருகே கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல், குடிநீர் ஓடையில், வெள்ளமாக சென்றும், குடிநீர் வடிகால் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
உடுமலை திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்டு, குடிமங்கலம், மடத்துக்குளம், உடுமலை ஒன்றிய ஊராட்சிகளுக்கு, கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கோடை வெயில் முன்னதாகவே துவங்கி, கொளுத்தி வரும் நிலையில், கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
ஆனால், வினியோக குறைபாடுகளை சீரமைக்க குடிநீர் வடிகால் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை. உதாரணமாக, உடுமலை ஒன்றியம், எலையமுத்துார் பாலத்தில், கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் உள்ளது. உடைப்பில் இருந்து நாள்தோறும் பல ஆயிரம் லிட்டர் வீணாகி, அருகிலுள்ள ஓடையில், வெள்ளமாக செல்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால், மக்கள் வேதனையில் உள்ளனர். இதே போல், பல இடங்களில், கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு சீரமைக்கப்படாமல் உள்ளது.
கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, பிரதான குழாய் உடைப்புகளை உடனடியாக சீரமைக்க, குடிநீர் வடிகால் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

