/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
34வது வார்டு அங்கப்பா பள்ளி எதிரே 'அப்பப்பா' சகதி நிறைந்த சாலையால் பொதுமக்கள் அவதி
/
34வது வார்டு அங்கப்பா பள்ளி எதிரே 'அப்பப்பா' சகதி நிறைந்த சாலையால் பொதுமக்கள் அவதி
34வது வார்டு அங்கப்பா பள்ளி எதிரே 'அப்பப்பா' சகதி நிறைந்த சாலையால் பொதுமக்கள் அவதி
34வது வார்டு அங்கப்பா பள்ளி எதிரே 'அப்பப்பா' சகதி நிறைந்த சாலையால் பொதுமக்கள் அவதி
ADDED : அக் 27, 2025 11:52 PM

சேற்றில் மாட்டும் வாகனங்கள் கவுண்டம்பாளையம், 34வது வார்டு, ராகவேந்திரா நகர், அங்கப்பா பள்ளி எதிரே மண் ரோடு சமீபத்தில் பெய்த மழையில் சேறும், சகதியுமாக இருக்கிறது. இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சேற்றில் வழுக்கி விழுகின்றனர். கார் சக்கரங்கள் சேற்றில் மாட்டிக்கொள்கின்றன.
- சண்முகா: தெருவிளக்கு பழுது ஜி.என்.மில்ஸ், சுப்பிரமணியம்பாளையம், அண்ணா டீச்சர்ஸ் காலனி பகுதியில், 'எஸ்.பி - 25 பி - 13' என்ற எண் கொண்ட கம்பத்தில், ஐந்து மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- கமலா: எரியா விளக்குகள் போத்தனுார் மெயின் ரோடு, 95வது வார்டு, திருவள்ளுவர் நகர், லட்சுமி திருமண மண்டபம் எதிரே உள்ள கம்பம் எண் 4 மற்றும் அருகிலுள்ள கம்பங்களில், தெருவிளக்கு எரிவதில்லை. புகார் செய்து ஒரு மாதம் ஆகியும், பழுது சரிசெய்யப்படவில்லை.
- நரேஷ்: சாலையில் கழிவுநீர் மாநகராட்சி, 81வது வார்டு, தாமஸ் வீதியில் இருந்து ரங்கே கவுடர் வீதிக்கு செல்லும் வழியில், பாதாள சாக்கடை சாலை நடுவே வழிகிறது. வாகனங்கள் செல்லும்போது நடந்து செல்வோர் மீது தெறிக்கிறது. இதனால், அருகில் உள்ள வீராசாமி முதலியார் பள்ளி வளாகத்திலும், கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- ஹரிதாஸ்: குவியும் குப்பை மாநகராட்சி முதல் வார்டு, விஸ்வநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே தொடர்ந்து குப்பை கொட்டப்படுகிறது. பலமுறை புகார் செய்தும் அகற்றவில்லை. கடும் துர்நாற்றம் வீசுவதால், பயணிகள் சிரமப்படுகின்றனர்.
- சாந்தி: வடியாத மழைநீர் வெள்ளக்கிணறு, இரண்டாவது வார்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி இரண்டில், வீதியை விடவும் தெருச்சாலை உயரமாக உள்ளது. தண்ணீர், மழைநீர் வடிகாலில் வடிந்து செல்லும் வகையிலும் இல்லை. இதனால், சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது.
- மணிமாறன்: வெள்ளக்கிணறு.: அடிக்கடி விபத்து ரேஸ்கோர்ஸ், 83வது வார்டு, பிஷப் அப்பாசாமி கல்லுாரி சாலை, பல இடங்களில் பள்ளமாக உள்ளது. பைக்கில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். சாலைப்பள்ளங்கள் தெரியாததால் இரவில் விபத்து நடக்கிறது.
- பாலகிருஷ்ணன்: சுகாதாரமற்ற சூழல் நீலிக்கோணாம்பாளையம் மெயின் ரோடு, வரதராஜபுரம், 54வது வார்டு, ஆர்.வி.எல்., நகர் புதிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை. வடிகாலில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது.
- சுப்பிரமணியம்: விதியை மீறும் வாகனங்கள் ஆர்.எஸ்.புரம், எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பள்ளி பகுதியில், சாலையின் இருபுறமும் கார்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பள்ளி வேன், குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்களுக்கு, இது இடையூறாக உள்ளது. இப்பகுதியில் விதி மீறி வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
- பிரேம்குமார்:

