/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கழிவுநீர் குழாய் உடைப்பால் துர்நாற்றம்; பொதுமக்கள் அவதி
/
கழிவுநீர் குழாய் உடைப்பால் துர்நாற்றம்; பொதுமக்கள் அவதி
கழிவுநீர் குழாய் உடைப்பால் துர்நாற்றம்; பொதுமக்கள் அவதி
கழிவுநீர் குழாய் உடைப்பால் துர்நாற்றம்; பொதுமக்கள் அவதி
ADDED : ஜூலை 29, 2025 08:45 PM
போத்தனூர்; கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட, தருண் ரெசிடென்சி சாலை - -ஈச்சனாரி சாலை சந்திப்பில், பாதாள சாக்கடை கழிவுநீர் குழாயில், உடைப்பு ஏற்பட்டது.
கழிவுநீர் பெருக்கெடுத்து சுமார் ஒரு கி.மீ., தூரம் ஈச்சனாரி நோக்கி ஓடியது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் ஏற்பட்டது. சாலையின் ஒருபுறம் மட்டுமே, வாகனங்கள் செல்லும் நிலை ஏற்பட்டது.
கவுன்சிலர் கார்த்திகேயன், பாதாள சாக்கடை பணி மேற்கொள்ளும் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தார். சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து, கழிவுநீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டது.
உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தடுப்புகள் வைக்கப்பட்டன. சீரமைப்பு பணியை தனியார் நிறுவனத்தினர் துவக்கினர்.
நேற்று உடைப்பு ஏற்பட்ட அதே இடத்தில் கடந்த, 14ம் தேதியும் உடைப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.