/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தரமான விதையால் விளைச்சல் அதிகரிக்கும்'
/
'தரமான விதையால் விளைச்சல் அதிகரிக்கும்'
ADDED : பிப் 13, 2025 11:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அன்னுார் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில், 'அட்மா' திட்டத்தில் விதை உற்பத்தியாளர்களுக்கான தரமான விதை உற்பத்தி பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. வேளாண் துணை இயக்குனர் புனிதா தலைமை வகித்து பேசுகையில், விளைச்சலுக்கு விதை முக்கிய ஆதாரம். எனவே சான்று பெற்ற தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும், என்றார். வேளாண் உதவி இயக்குனர் பிந்து முன்னிலை வகித்தார்.
வேளாண் துணை இயக்குனர் (ஓய்வு) மோகன்ராஜ் சாமுவேல் பேசுகையில், ஒருங்கிணைந்த மேலாண்மையை பயன்படுத்தி தரமான விதைகளை உற்பத்தி செய்யலாம், என்றார்.