/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் காலாண்டு தேர்வு துவங்கியது
/
பள்ளிகளில் காலாண்டு தேர்வு துவங்கியது
ADDED : செப் 20, 2024 10:20 PM

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் தாலுகாவில், 54 பள்ளிகளில் நேற்று காலாண்டு தேர்வு தொடங்கியது.
மேட்டுப்பாளையம் தாலுகாவில், 26 அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள், எட்டு உயர்நிலைப் பள்ளிகள், 20 நடுநிலைப் பள்ளிகள் என, மொத்தம் 54 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில், 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளிகள் திறந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில், மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது.
நேற்று முன்தினம், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு தேர்வு துவங்கியது. நேற்று ஆறு முதல் பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கும், தேர்வு துவங்கியது. நேற்று தமிழ் தேர்வு நடந்தது. வருகிற 27ம் தேதி வரை மாணவர்களுக்கு, காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது.