/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுப்பாட்டுடன் காலாண்டு தேர்வு; வினாத்தாள் கட்டுக்காப்பு மையம் அமைப்பு
/
கட்டுப்பாட்டுடன் காலாண்டு தேர்வு; வினாத்தாள் கட்டுக்காப்பு மையம் அமைப்பு
கட்டுப்பாட்டுடன் காலாண்டு தேர்வு; வினாத்தாள் கட்டுக்காப்பு மையம் அமைப்பு
கட்டுப்பாட்டுடன் காலாண்டு தேர்வு; வினாத்தாள் கட்டுக்காப்பு மையம் அமைப்பு
ADDED : செப் 18, 2024 08:56 PM
பொள்ளாச்சி : காலாண்டு தேர்வு இன்று துவங்க உள்ள நிலையில், பொள்ளாச்சி நகர், சுற்றுப்பகுதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கான வினாத்தாள்கள் பெறுவதற்கு, இரு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பள்ளிக் கல்வித் துறையில், ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, இன்று துவங்கும் காலாண்டு தேர்வு, வரும், 27ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வுக்கு மாநில அளவில் பொது வினாத்தாள் தயாரித்து, அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளித் தலைமையாசிரியர்கள், ஒவ்வொரு தேர்வு நாளன்றும், அந்தந்த நாட்களுக்கு உரிய வினாத்தாள்களை, காலை, 8:00 முதல் 8:30 மணிக்குள், ஒதுக்கப்பட்ட வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் இருந்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி நகர், சுற்றுப்பகுதிளுக்கு, சமத்துார் ராம ஐயங்கார் நகராட்சி மேல்நிலைப் பள்ளி மற்றும் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வினாத்தாள் கட்டுக்காாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஒன்று முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 20ம் தேதி தேர்வு துவங்குகிறது. அதன்படி, தேவையான வினாத்தாள்கள், மொத்தமாக அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளைப் பொறுத்தமட்டில், 'இமெயில்' வாயிலாக வினாத்தாள் பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்கப்படும். அதேநேரம், நகர் மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், 6 முதல் பிளஸ் 2 வரையான மாணவர்களுக்கான வினத்தாள், அந்தந்த வினாத்தாள் கட்டுக் காப்பு மையத்தில் இருந்து, அந்தந்த நாளில் வாங்கிச் செல்ல வேண்டும்.
அதன்படி, பள்ளித் தலைமையாசிரியர்கள், பொறுப்பான நபரை தகுந்த அதிகார அளிப்புக் கடிதத்துடன் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்துக்கு சென்று வினாத்தாள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
தேர்வு அறையில், 10 நிமிடத்திற்கு முன்னதாக மட்டுமே வினாத்தாள் கட்டுகளைப் பிரிக்க வேண்டும். காலாண்டு தேர்வை பொதுவினாத்தாள் முறையில் நடத்துவதன் வாயிலாக கல்வியில் பின்தங்கிய பள்ளிகளை கண்டறியலாம்.
இவ்வாறு, கூறினர்.

