/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஆர் கோல்டு' நிறுவனம் சார்பில் உக்கடத்தில் உழவர் சிலை திறப்பு
/
'ஆர் கோல்டு' நிறுவனம் சார்பில் உக்கடத்தில் உழவர் சிலை திறப்பு
'ஆர் கோல்டு' நிறுவனம் சார்பில் உக்கடத்தில் உழவர் சிலை திறப்பு
'ஆர் கோல்டு' நிறுவனம் சார்பில் உக்கடத்தில் உழவர் சிலை திறப்பு
ADDED : ஜன 11, 2025 11:15 PM

கோவை: உக்கடம் பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ரவுண்டானாவில், 'ஆர் கோல்டு' நிறுவனம் சார்பில், உழவர் சிலை நிறுவப்பட்டு திறக்கப்பட்டது.
இரண்டு காளைகள் பூட்டப்பட்டு, விவசாயி ஒருவர் ஏர் உழுவது போலவும், அவரது மனைவி விதைப்பது போலவும், சிலைகள் நிறுவப்பட்டிருக்கின்றன. அருகாமையில் உள்ள மேம்பாலத் துாண்களில் ஒரு பெண் ஆடு மேய்ப்பது; தோட்டத்தில் பம்ப் செட் தண்ணீரில் சிறுவன் குளிப்பது; ஒருவர் உரம் தெளிப்பது போல ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன. துாண் மேற்பரப்பின் இருபுறமும், திருக்குறள் எழுதப்பட்டு இருக்கிறது.
மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள உழவர் சிலையை, கலெக்டர் கிராந்திகுமார் திறந்து வைத்தார்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், உதவி கலெக்டர் (பயிற்சி) அங்கத்குமார், 'ஆர் கோல்டு' நிறுவனர் ரங்கசாமி, 'பிளாக் ஷிப் மீடியா' சதீஷ்குமார், மகா பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.