ADDED : ஆக 02, 2026 04:42 AM

செய்முறை : கேழ்வரகு மாவை 1 மணி நேரம் இரண்டு கோப்பை தண்ணீரில் ஊறவைத்து, மெல்லிய துணியால் வடிகட்டி வைத்துக்கொள்ளவும். (ராகி பால்) வானலியில் 1 ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.
கெட்டியான தேங்காய் பால் மற்றும் கேழ்வரகு மாவை ஒன்றாக கலந்து அதே வாணலியில் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும். தீ மிதமானதாக வைத்து கை விடாமல் கிளறவும். நெய் விட்டு முந்திரியை பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும். கெட்டியான தேங்காய் பால் மற்றும் கேழ்வரகு மாவை ஒன்றாக கலந்து அதே வாணலியில் சேர்த்து கட்டி தட்டாமல் கிளறவும். தீ மிதமானதாக வைத்து கை விடாமல் கிளறவும். நல்ல கெட்டியாக வரும் சமயம் வெல்லம் சேர்த்து கிளறவும். (வெல்லம் 1/4 கோப்பை நீரில் அடுப்பில் வைத்து கரைத்தும் சேர்க்கலாம்).
இடையில் நெய் சேர்த்து நன்கு கிளறவும் 10 நிமிடம் வரை அப்படியே கிளறவும், கண்ணாடி போல் நன்கு அல்வா பதம் வந்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி, வறுத்த முந்திரிபருப்பு துாவி பரிமாறவும்.
தேங்காய் பாலோடு சேர்த்து கிண்டுவதால் நல்ல தேங்காய் பால் மனம் அசத்தலாக இருக்கும். நெய்யும் குறைவாகவே சேர்க்கலாம்.
