/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
/
ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
ADDED : நவ 11, 2024 04:24 AM

கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு அருகே குளத்துப்பாளையத்தில், தேவணாம்பாளையம் ரோட்டில் ரேக்ளா பந்தயம் நடந்தது. போட்டியானது, 200மீ., 300மீ., துாரம் என, இரு பிரிவுகளில் நடத்தப்பட்டது.
இதில், ஆனைமலை, உடுமலை, மடத்துக்குளம், வேட்டைக்காரன்புதுார், நெகமம், பழநி, தாராபுரம் என, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வீரர்கள், தங்கள் காளைகளுடன் போட்டியில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, 200க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் களம் இறக்கப்பட்டன. ரேக்ளா பந்தய போட்டியில், பங்கேற்ற காளைகள், எல்லை கோடுகளை நோக்கி சீறிப்பாய்ந்தன.
இரு பிரிவுகளிலும் முதலிடம் பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கு, ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன. ஏராளமான பொதுமக்கள் போட்டியை கண்டுகளித்தனர்.