/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தண்டவாள பராமரிப்பு பணி ரயில் சேவைகளில் மாற்றம்
/
தண்டவாள பராமரிப்பு பணி ரயில் சேவைகளில் மாற்றம்
ADDED : ஏப் 08, 2025 10:36 PM
பொள்ளாச்சி,; தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, பொள்ளாச்சி - கோவை இடையே இயக்கப்படும் ரயில், போத்தனுாருடன் நாளை முதல் நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து, கோவைக்கு தினமும் காலை, 8:00 மணிக்கு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், கிணத்துக்கடவு, போத்தனுார் வழியாக கோவைக்கு செல்கிறது. வேலைக்கு செல்வோர், கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள் என பலதரப்பினரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக, தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், பொள்ளாச்சி - கோவை இடையே இயக்கப்படும் ரயில், நாளை (10ம் தேதி) முதல் 25ம் தேதி வரை, 16 நாட்களுக்கு போத்தனுார் வரை மட்டுமே இயக்கப்படும். போத்தனுாரில் இருந்து கோவைக்கு இயக்கப்படாது.
அதே போன்று, மதுரை - கோவை இடையே இயக்கப்படும் ரயிலும், வரும், 11ம் தேதி முதல் (10 நாட்கள் மட்டும்) போத்தனுார் வரை இயக்கப்படும்.தண்டவாள பராமரிப்பு பணிக்காக இந்த ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

