ரயில்வே பார்சல் சேவைக்கு வரவேற்பு பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரமாகிறது
ரயில்வே பார்சல் சேவைக்கு வரவேற்பு பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரமாகிறது
UPDATED : நவ 08, 2026 12:00 AM
ADDED : நவ 07, 2026 08:24 PM
திருப்பூர்: ரயில்வே பார்சல் சேவைக்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தி யில் வரவேற்பு அதிகரித்து உள்ளது.
கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய ரயில்வே நிலையங்களில் பார்சல் சேவை சிறப் பாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு இச்சேவையை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கியுள்ளதால், பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் இதை பயன்படுத்துவதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.
வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில், தொடர்ந்து இச்சேவையைப் பயன்படுத்துவோருக்கு அஞ்சல் சேமிப்புக் கணக்குகள் தொடங்கித் தரப்படுவதுடன், ‘பே ஆன் லேட்டர்’ எனப்படும் பின்னர் பணம் செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
மத்திய, மாநில அரசுகளின் ஸ்டார்ட்அப் ஊக்கு விப்புத் திட்டங்களால், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும் ஏராளமான இளம் தொழில்முனைவோரும் ரயில்வே பார்சல் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், பார்சல் சேவை வாயிலாக, கஞ்சா, பான் மசாலா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களும், சட்டவிரோதப் பொருட்களும் கடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சில இடங்களில் இத்தகைய பொருட்கள் பறிமுதல் செய் யப்பட்டுள்ளதால், சுங்கத்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இத்தகைய கடத்தல் பொருட்கள் பிடிபடும்போது, சுங்கத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட ரயில்வே பார்சல் அலுவலகத்துக்கு நேரில் சென்று, பார்சலை அனுப்பியவர் யார், அவரது அடையாள விவரங்கள் என்ன என்பது குறித்து விரிவாக விசாரிக்கின்றனர்.
இதுபோன்ற விசாரணைகள் பார்சல் பிரிவு ஊழியர்களுக்குத் தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்துகிறது.
இதனை தொடர்ந்து, பார்சல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், புதிதாகப் பார்சல் அனுப்ப வருவோர் கொண்டு வரும் பொருட்களைத் திறந்து காட்டி, அவற்றின் விவரங்களைச் சரிபார்த்த பிறகே பார்சல்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரயில்வே அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
