/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயிலில் பெண் பயணிகளுக்கு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு
/
ரயிலில் பெண் பயணிகளுக்கு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு
ரயிலில் பெண் பயணிகளுக்கு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு
ரயிலில் பெண் பயணிகளுக்கு ரயில்வே போலீசார் விழிப்புணர்வு
ADDED : ஏப் 02, 2025 07:08 AM

கோவை; போத்தனுார் ரயில்வே போலீசார் சார்பில், ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன், ஜோலார்பேட்டையில் ரயிலில் பெண்கள் பெட்டியில் தனியாக பயணித்த, 36 வயது கர்ப்பிணியை, ஹேமராஜ் என்பவர் கீழே தள்ளிவிட்டார். அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, ரயிலில் செல்லும் பெண்கள் பாதுகாப்பை பலப்படுத்த, ரயில்வே போலீசார் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள பெண்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கோவை போத்தனுார் ரயில்வே போலீசார் சார்பில், சிட்கோ ரத்தினம் கலை, அறிவியல் கல்லுாரியில், ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
ரயில் பெண்களின் பாதுகாப்பு குழு வாட்ஸ்அப் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பெண் பயணிகள் பாதுகாப்பு பயணத்தின் போது, உதவிக்கு உடனடியாக 139,1512 மற்றும் 99625 00500 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, உதவி பெறலாம் என அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், போத்தனுார் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் ருவாந்திகா, ரத்தினம் கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியன் மற்றும் வணிகவியல் டீன் ஹேமலதா ஆகியோர் பங்கேற்றனர்.

