ADDED : செப் 28, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷன் முன்பு, எஸ்.ஆர்.எம்.யூ., தொழிற்சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஒருங்கிணைந்த தொழிற் சங்கத்தின் செயலாளர் சாகுல் ஹமீது தலைமை தாங்கினார். கிளை உதவி செயலாளர் சுஜேஷ் வரவேற்றார். கோட்டத் தலைவர் நவீன் கோரிக்கை வலியுறுத்தி பேசினார்.
மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு புதிதாக குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும். தற்போது தொழிலாளர்கள் குடியிருக்கும் வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளதால், உடனடியாக பழுதை சரி செய்ய வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் சாக்கடை வசதி உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உதவி செயலாளர் குருஜி நன்றி கூறினார்.
