/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறுவாணியில் மீண்டும் மழை; நீர்மட்டம் 40 அடியாக உயர்வு
/
சிறுவாணியில் மீண்டும் மழை; நீர்மட்டம் 40 அடியாக உயர்வு
சிறுவாணியில் மீண்டும் மழை; நீர்மட்டம் 40 அடியாக உயர்வு
சிறுவாணியில் மீண்டும் மழை; நீர்மட்டம் 40 அடியாக உயர்வு
ADDED : ஜூன் 25, 2025 11:05 PM

கோவை; சிறுவாணி அணை பகுதியில் மீண்டும் மழைப்பொழிவு காணப்படுவதால், 40 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.
கேரள வனப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுவாணி அணையில் இருந்து கோவைக்கு தேவையான குடிநீர் தருவிக்கப்படுகிறது. தென்மேற்கு பருவ மழை துவக்கமே நன்றாக இருந்ததால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்திருந்தது.
நீர் மட்டம், 43 அடியாக இருந்தபோதே, பாதுகாப்பு காரணங்களை கூறி, தண்ணீர் வெளியேற்றப்பட்டது. அவ்வாறு செய்யாமல் ஒப்பந்தப்படி, 10.1 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
கடந்த வாரம் அணை பகுதியில் மழையில்லை. குடிநீர் தேவைக்காக அதிகளவு எடுக்கப்பட்டதால், நீர் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது. நேற்று முன்தினம், 39.79 அடியாக குறைந்திருந்தது.
தற்போது அணை பகுதியில் மழைப்பொழிவு மீண்டும் துவங்கியுள்ளது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, 42 மி.மீ., அடிவாரத்தில், 31 மி.மீ., பதிவானது. 40.57 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. குடிநீர் தேவைக்காக, 9.38 கோடி லிட்டர் தருவிக்கப்பட்டது.
வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், ''அடுத்த, 72 மணி நேரத்துக்கு தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் கூடியிருக்கும். மேற்கு பாலக்காடு கணவாய், மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகள், கேரளா, கர்நாடகா ஆகிய இடங்களில் கன மழை பெய்யும்.
கோவை மாநகரம் மேகமூட்டத்துடன் காணப்படும்; அவ்வப்போது சாரல் மழை இருக்கும். அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும். கொங்கு சமவெளி பகுதிகளில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும். வடக்கு கொங்கு பகுதிகளில் மட்டும் ஆங்காங்கே மிதமான வெப்பச்சலன மழைக்கு வாய்ப்புள்ளது,'' என்றார்.