/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை கோர்ட்டில் மழை; வழக்கு ஆவணங்கள் சேதம்
/
கோவை கோர்ட்டில் மழை; வழக்கு ஆவணங்கள் சேதம்
ADDED : அக் 25, 2024 06:56 AM

கோவை : கோவை 'டான்பிட்' கோர்ட்டில், மழையில் நனைந்து சேதமடைந்த வழக்கு ஆவணங்களை வெயிலில் காயவைத்தனர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட செஷன்ஸ் கோர்ட் அமைந்துள்ள கட்டடத்தின் மொட்டை மாடியில், தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (டான்பிட் ) செயல்படுகிறது.
இந்த நீதிமன்றம் ஆஸ்பெட்டாஸ் கூரையால் ஆனகட்டடத்தில் உள்ளது. வெயில் காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் இந்த கட்டடத்தில், மழை பெய்தால் தண்ணீர் கசிவாகி கோர்ட் அறைக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.
கடந்த சில நாட்களாக கோவையில் பலத்த மழை பெய்தது. இந்த மழையால், கோர்ட் அறைக்குள் ஆஸ்பெட்டாஸ் வழியாக தண்ணீர் புகுந்ததில், அங்கு வைக்கப்பட்டிருந்த வழக்கு ஆவணங்கள் நனைந்து சேதமடைந்தது. நனைந்த காகிதங்களை கோர்ட் ஊழியர்கள் மொட்டை மாடி வரண்டாவில் வெயிலில் காய வைத்தனர்.
கோர்ட் ஆவணங்களை பாதுகாக்க தேவையான வசதிகள் செய்து கொடுக்க, நீதித்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

