ADDED : ஜூலை 27, 2025 10:36 PM

பாலக்காடு; கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் செறுதுருத்தி பகுதியில் உள்ளது, கலை மற்றும் கலாசார குழு 'சம்ஸ்கிருதி'. இந்தக் குழு ஒவ்வொரு ஆண்டும் 'மழை உற்சவம்' என்ற கலாசார நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம்.
நடப்பாண்டு, இந்த உற்சவம் நேற்று நடந்தது. வள்ளத்தோள் நகர் ஊராட்சி மற்றும் கேரளா கலா மண்டலம் ஒத்துழைப்புடன், கலா மண்டலத்தில் நடந்த இந்நிகழ்ச்சியை, அப்பகுதி எம்.எல்.ஏ., பிரதீப் துவக்கி வைத்தார். வள்ளத்தோள் நகர் ஊராட்சி தலைவர் ஷேக் அப்துல் காதர் பங்கேற்றார்.
நிகழ்ச்சியை ஒட்டி 'கவிதையும் மழையும்', 'திரைப்படத்தில் உள்ள மழை', 'மழை மற்றும் விவசாயம்', 'மழைக்கால சுகாதாரம்' ஆகிய தலைப்புகளில் விவாதங்கள் நடந்தன.
தொடர்ந்து மழை கவிதைகள், இசைக்கருவி இசைவு, மழை பாட்டு, நடனம், ஓவியம் வரைதல் ஆகிய நிகழ்வுகள் நடந்தன. இந்நிகழ்ச்சியை ஏராளமான மக்கள் கண்டுகளித்தனர்.