/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடுத்த சில நாட்களுக்கு கோவையில் மழை தொடரும்
/
அடுத்த சில நாட்களுக்கு கோவையில் மழை தொடரும்
ADDED : ஜூலை 22, 2025 10:44 PM
கோவை; அடுத்த சில நாட்களுக்கு கோவையில் மழை தொடரும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
கடந்த சில நாட்களாக, கோவையில் இதமான சூழலும் மிதமான மழையும் பெய்து வருகிறது. மலைப் பகுதிகளில் ஆங்காங்கு கனமழை பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட 3 டிகிரி செல்சியஸ் குறைவாக, பதிவாகி வருகிறது.
இன்று, வானம் பாதி மேகமூட்டத்துடன் காணப்படும். ஆங்காங்கு, மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை, மற்றும் வரும் 25ம் தேதி மேகமூட்டத்துடன், லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 26ம் தேதி, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு குறைவு. 27ம் தேதி மழை பெய்யும். 28ம் தேதி, வானம் தெளிவற்று காணப்படும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.