UPDATED : அக் 23, 2026 12:00 AM
ADDED : அக் 22, 2026 09:26 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து அன்னூர் வட்டார வேளாண் துறையினர் கூறுகையில், 'வாழை நடவு செய்ய இந்த மழை பயன்படும்.
ஏற்கனவே விதைக்கப்பட்ட சோளம், மக்காச்சோளம், கொள்ளு, மஞ்சள் ஆகிய பயிர்களுக்கு தற்போது பெய்து வரும் மழை பயன் தரும். கடந்த இரு வாரங்களில் நான்கு மழை நாட்களில் 120 மி.மீ., மழை பெய்துள்ளது,' என்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘தற்போது தென்னை மற்றும் பனை மரங்களுக்கு உயிர் தண்ணீர் கிடைத்துள்ளது. தொடர்ந்து இதுபோல் நான்கு மழை பெய்தால் கிணறுகளில் ஊற்று அதிகரிக்கும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.' என்றனர்.
