ADDED : ஜூலை 13, 2026 08:43 AM

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் உள்ள, சர்வீஸ் ரோட்டின் ஒரு சில இடங்களில், தூண்களின் இடுக்குகள் வாயிலாக மழை நீர் கொட்டுவதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மேம்பாலத்தில் இருந்து மழை நீர் வடிந்து செல்ல அங்கங்கே குழாய் பதிக்கப்பட்டு உள்ளது. இதில், பல இடங்களில் குழாய்கள் சேதம் அடைந்தும், கசிவு இருப்பதாலும், அரசு மேல்நிலைப்பள்ளி, பழைய செக்போஸ்ட் அருகில் உள்ள பஸ் ஸ்டாப் பகுதிகளில் மேம்பால இடுக்குகள் வழியாக மழை நீர் சர்வீஸ் ரோட்டில் ஒழுகுகிறது.
இதை பயன்படுத்தி, நான்கு முதல் 12 சக்கரம் வாகனங்கள் சில, மழை நீர் ஒழுகும் இடத்தில் நிறுத்தி, 'வாட்டர் வாஷ்' செய்யப்படுகின்றன. இதனால் மக்கள் சென்றுவர சிரமம் ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க மழைநீர் வடிந்து செல்ல பதிக்கப்பட்டு இருக்கும் குழாய்களை மீண்டும் சீரமைக்க வேண்டும். பாலத்தின் இடுக்குகள் வழியாக மழை நீர் ஒழுகுவதை சரி செய்ய, தேசிய நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
