ADDED : நவ 23, 2026 09:39 PM
அ நிறம் | அளவு
கோவை: மழை நீர் சேமிப்பு கட்டமைப்பு குறித்து மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. வீடுகள், வணிக வளாகங்களில் மழைநீர் கட்டமைப்பை ஆய்வு செய்து வருகிறார்கள். இல்லாத இடங்களில் புதிய கட்டமைப்பை உருவாக்கவும், தேவைப்படும் இடங்களில் புதுப்பிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில் கார்த்திகை தீபம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, டவுன்ஹால் மாநகராட்சி அலுவலகத்தில், 1,500 தீப விளக்குகளில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பு மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்வையிட்ட கமிஷனர் ரவி தேஜா, மழை நீரை சேமித்து, நிலத்தடி நீர் உயர்த்த கட்டமைப்பு அவசியம் என கூறினார்.
