/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம்; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
/
சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம்; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம்; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
சுரங்கப்பாதையில் மழைநீர் தேக்கம்; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
ADDED : மே 26, 2025 10:44 PM

சேதமடைந்த ரோடு
கிணத்துக்கடவு அருகே, நெ.10.முத்துாரில் இருந்து முத்துக்கவுண்டனுார் செல்லும் ரோடு கடுமையாக சேதமடைந்து கரடு முரடாக உள்ளது. இவ்வழியில் ஏராளமானோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சிலர் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே, ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.
- தங்கராஜ், முத்துக்கவுண்டனூர்.
ரோட்டில் 'பார்க்கிங்'
வால்பாறை நகரில் இருந்து, சிறுகுன்றா செல்லும் ரோட்டில், போக்குவரத்துக்கு இடையூறாக அதிகளவு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் மற்ற வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. ரோட்டோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- தாரணி, வால்பாறை.
போர்வெல் சீரமைக்கப்படுமா
கிணத்துக்கடவு, பெரியார்நகரில் உள்ள பொது போர்வெல் பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பலர் தண்ணீர் தேவைக்கு சிரமப்படுகின்றனர். எனவே, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் போர்வெல்லை சீரமைக்க வேண்டும்.
-- ராஜ், கிணத்துக்கடவு.
ரோட்டோரம் குப்பை
கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில், சர்வீஸ் ரோட்டோரம் கொட்டப்பட்ட குப்பை, ஊராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றம் செய்யப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் மக்கள் பலர் அங்கு குப்பை கொட்டிச்செல்கின்றனர். இதை தடுக்க கண்காணிப்பு கேமரா அமைத்தும், குப்பை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - பாண்டியன், கிணத்துக்கடவு.
மழைநீர் தேக்கம்
நெகமத்தில் இருந்து வடசித்துார் செல்லும் வழித்தடத்தில் வளைவான பகுதியில், ரோட்டோரம் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற வடிகால் அமைக்க வேண்டும்.
-- கிரி, நெகமம்.
செடிகளை அகற்றணும்
பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் உடுமலை பி.ஏ.பி., கால்வாய் கரைகளில் செடிகள் வளர்ந்து அகற்றப்படாமல் உள்ளது. இதனால், வாகனங்கள் செல்லும் போது இடையூறு ஏற்படுகிறது. எனவே, கரைகளில் வளர்ந்துள்ள செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கணேசன், உடுமலை.
வாகன ஓட்டுநர்கள் அவதி
உடுமலை பழனியாண்டவர் நகர் செல்லும் ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குகிறது. இதில் வாகனங்கள் செல்ல முடியாமல் திணற வேண்டியதுள்ளது. எனவே, தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதார சீர்கேடு
உடுமலை, பூக்கடை சந்து பகுதியில் சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. குப்பைக்கழிவுகள் கால்வாயில் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகள் தேங்குவதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.
- ராதா, உடுமலை.
குப்பை எரிப்பு
உடுமலை, சின்னவீரம்பட்டி பகுதியில் குப்பைக்கழிவுகளை ரோட்டோரத்தில் எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் புகை மூட்டம் பரவுகிறது. வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்ல முடியாத நிலையில் புகை பரவுகிறது. கழிவுகளில் பிளாஸ்டிக் எரிவதால் அருகில் குடியிருக்கும் பகுதியினருக்கு சுவாச பிரச்னை ஏற்படுகிறது.
- சிவக்குமார், உடுமலை.
திறந்தவெளி கழிப்பிடம்
உடுமலை, வடபூதிநத்தம் பகுதியில் ரோட்டோரம் முழுவதும் திறந்த வெளிக்கழிப்பிடமாக உள்ளது. இதனால் சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது. சுகாதாரமில்லாமல் நோய் பரவும் பகுதியாகவும் மாறுகிறது. கிராமத்தில் சுகாதாரத்தை மேம்படுத்த ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகியுள்ளது.
- மோகன், வாளவாடி.
நோய் பரவும் அபாயம்
உடுமலை கச்சேரி வீதியில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால், பொதுமக்கள் நடந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- கண்ணன், உடுமலை.
ஒளிராத தெருவிளக்குகள்
உடுமலை, ஐஸ்வர்யா நகர் மூன்றாவது வீதியில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இரவு நேரங்களில் வீதியில் வெளிச்சம் இல்லாமல் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் அதிகமாக விபத்துக்குள்ளாகின்றனர். முதியவர்கள் மாலையில் நடைபயிற்சி செய்வதற்கும் சிரமப்படுகின்றனர்.
- பிரபு, உடுமலை.