/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'நோ டிரக்ஸ்' கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு; கல்லுாரி, பள்ளி மாணவர்கள் பேரணி
/
'நோ டிரக்ஸ்' கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு; கல்லுாரி, பள்ளி மாணவர்கள் பேரணி
'நோ டிரக்ஸ்' கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு; கல்லுாரி, பள்ளி மாணவர்கள் பேரணி
'நோ டிரக்ஸ்' கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு; கல்லுாரி, பள்ளி மாணவர்கள் பேரணி
ADDED : ஜூன் 26, 2025 09:46 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள, பள்ளி, கல்லுாரிகளில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
* பொள்ளாச்சி அருகே, புளியம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு மன்றத்தின் சார்பில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில், மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்று, புகையிலை புற்றுநோயை உருவாக்கும் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைமையாசிரியர் சித்ரா, தமிழ் ஆசிரியர் ஸ்ரீதர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, மேற்கு போலீஸ் ஸ்டேஷன் சார்பில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மேற்கு இன்ஸ்பெக்டர் மீனாப்பிரியா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் பிரகாஷ் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்கிய பேரணியில், மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி, 'நோ டிரக்ஸ்' என கோஷம் எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பஸ் ஸ்டாண்ட், பாலக்காடு ரோடு வழியாக நகராட்சி அலுவலகம் அருகே பேரணி நிறைவடைந்தது.
* மணக்கடவு வாணவராயர் வேளாண் கல்வி நிறுவனம் மற்றும் ஆனைமலை போலீஸ் சார்பில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி, வளந்தாயமரத்தில் நடந்தது. இன்ஸ்பெக்டர் முத்துபாண்டியன், பேரணியை துவக்கி வைத்தார். சிறப்பு எஸ்.ஐ., முருகவேல், நாட்டுநலப்பணித்திட்ட அதிகாரிகள் தாமோதரன், நவீனா, சங்கரராமன், கார்த்திகா ஆகியோர் பங்கேற்றனர்.
பேரணியில் மாணவர்கள், போதைப்பொருள் பயன்படுத்துதல், சட்ட விரோத கடத்தல் ஆகியவற்றுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி சமூகம், கல்வி, கலாசாரம் மற்றும் குடும்ப நலனில் போதை மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கிணத்துக்கடவு
*கிணத்துக்கடவு அக் ஷயா கல்லூரி சார்பில், போதைப் பொருள் ஒழிப்பு தினமான நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி, பஸ் ஸ்டாண்டில் நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாதேவன் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருளால் ஏற்படும் தீங்குகள் குறித்து பேசினார்.
அதன்பின், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இன்ஸ்பெக்டர் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.
* மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், போதைப்பொருள் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு 'ஸ்லோகன்' எழுதுதல், நாடகம், பேச்சு மற்றும் கவிதை போட்டிகள் நடந்தது. போதை பொருளால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து ஆசிரியர்கள் பேசினர். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மயிலாத்தாள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் வி.ஏ.ஓ., மதுக்கண்ணன் பங்கேற்றனர். மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
உடுமலை
* உடுமலை ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி நடந்தது. டி.எஸ்.பி., நமச்சிவாயம், போதை மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கமளித்தார்.
தொடர்ந்து மாணவர்கள் பள்ளியிலிருந்து அண்ணா குடியிருப்பு வழியாக விழிப்புணர்வு வாசகங்களை கோஷமிட்டு, பேரணியாக சென்றனர். பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன், பள்ளி முதல்வர் சகுந்தலாமணி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், நாட்டுநலப்பணி திட்டத்தின் சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. உதவி தலைமையாசிரியர் ஜெகநாத ஆழ்வார்சாமி தலைமை வகித்தார். திட்ட அலுவலர் சரவணன் வரவேற்றார். போதைப் பொருள் ஒழிப்பு குறித்து ஆசிரியர் சுரேஷ்குமார் பேசினார்.
மாணவர்களுக்கு வாசகம் எழுதுதல், பேச்சு, விளையாட்டு போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்பின், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர்.