ADDED : ஆக 10, 2025 02:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவையில், சகோதர பாசத்தை போற்றும் ரக்ஷா பந்தன் பண்டிகை, நேற்று கொண்டாடப்பட்டது.
வடமாநிலங்களில் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகக் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினத்தில், சகோதரிகள், தங்கள் சகோதரர்களின் நலனுக்காக பிரார்த்தித்து, ராக்கி கட்டும் வழக்கம் நிலவுகிறது. இந்நாள், சகோதரர்- சகோதரிகள் பாசத்தை வெளிப்படுத்தும் நாளாகக் கருதப்படுகிறது.
வடமாநிலத்தவர்கள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலத்தவரும் இப்பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் வசிக்கும் வடமாநிலத்தவர், பாரம்பரிய முறையில் ரக்ஷா பந்தன் பண்டிகையை கொண்டாடினர்.

