/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லூரிகளுக்கான கிரிக்கெட்: ராமகிருஷ்ணா சாம்பியன்
/
கல்லூரிகளுக்கான கிரிக்கெட்: ராமகிருஷ்ணா சாம்பியன்
ADDED : ஜன 08, 2024 01:35 AM
கோவை;பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில், ராமகிருஷ்ணா கல்லுாரி அணி, சாம்பியன் கோப்பையை வென்றது.
பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட, கல்லுாரி மாணவர்களுக்கு 'இன்டர் ஜோன்' கிரிக்கெட் போட்டி, மலுமிச்சம்பட்டி எஸ்.என்.எம்.வி., மற்றும் சரவணம்பட்டி குமரகுரு லிபரல் கலை அறிவியல் கல்லுாரி மைதானங்களில் நடந்தன.
மண்டல அளவிலான போட்டிகளில், முதல் இரண்டு இடம் பிடித்த எட்டு அணிகள் பங்கேற்றுள்ளன. இதன் லீக் போட்டியில், ஒவ்வொரு அணியும் தலா மூன்று போட்டிகளில் மோதின.
இதில் ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணி, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்திலும், கே.பி.ஆர்., கல்லுாரி அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்திலும், கொங்கு கலை அறிவியல் கல்லுாரி அணியை 73 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தி, மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற அணியாக, கோப்பையை கைப்பற்றியது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ராமகிருஷ்ணா கல்லுாரி முதல்வர் சிவக்குமார், எஸ்.என்.எம்.வி., கல்லுாரி முதல்வர் சுப்பிரமணி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.