/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.டி.சி.ஏ. முதல் டிவிஷன் கிரிக்கெட் வென்றது ராமகிருஷ்ணா மில்ஸ் அணி
/
சி.டி.சி.ஏ. முதல் டிவிஷன் கிரிக்கெட் வென்றது ராமகிருஷ்ணா மில்ஸ் அணி
சி.டி.சி.ஏ. முதல் டிவிஷன் கிரிக்கெட் வென்றது ராமகிருஷ்ணா மில்ஸ் அணி
சி.டி.சி.ஏ. முதல் டிவிஷன் கிரிக்கெட் வென்றது ராமகிருஷ்ணா மில்ஸ் அணி
ADDED : டிச 11, 2025 06:48 AM
கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம்(சி.டி.சி.ஏ,.) சா ர்பில் முதல் டிவிஷன் போட்டி, எஸ்.ஆர்.சி.ஏ. எஸ்., உள்ளிட்ட மைதானங்களில் நடக்கிறது. இ.ஏ.பி., கிரிக்கெட் அகாடமி அணியும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மில்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் மோதின.
இ.ஏ.பி., கிரிக்கெட் அகாடமி அணி, 43.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 165 ரன் எடுத்தனர். வீரர் முகமது ஆசிக், 51 ரன் எடுத்தார். எதிரணி வீரர் ஸ்ரீனிவாஸ் நான்கு விக்கெட், கோவிந்த் மூன்று விக்கெட் வீழ்த்தினர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா அணியினர், 34.3 ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு, 166 ரன் எடுத்து வெற்றி பெற்றனர். வீரர்களான ஹரி நிசாந்த், 57 ரன், சுஜய், 57 ரன், அஜிதேஸ், 39 ரன் எடுத்தனர். தொடர்ந்து, சூர்யாபாலா கிரிக்கெட் கிளப் அணியும், கோவை டஸ்கர்ஸ் அணியும் மோதின.
சூர்யபாலா அணியினர், 40.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 152 ரன் எடுத்தனர். பிரேம்குமார், 53 ரன், சிகாப்தீன், 34 ரன் எடுத்தனர்.
எதிரணி வீரர்களான முகமது ரபி நான்கு விக்கெட், சரத்குமார் மூன்று விக்கெட் வீழ்த்தினர்.
கோவை டஸ்கர்ஸ் அணியினர், 25.1 ஓவரில், 153 ரன் எடுத்தனர். சல்மான் கான், 73 ரன், விஜய், 35 ரன் எடுத்தனர்.

