/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நோய் தடுக்கும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை
/
நோய் தடுக்கும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை
நோய் தடுக்கும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை
நோய் தடுக்கும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை
ADDED : டிச 11, 2025 06:48 AM
சூலூர்: 'ஊராட்சிகள், பேரூராட்சிகளில் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடும், மஸ்தூர் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், என, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் கணேசன்( பொ), செயலாளர் சுபைதா பேகம், பொருளாளர் மேரி ராணி ஆகியோர் கலெக்டர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடித விபரம் :
நோய் தடுப்பு உள்ளிட்ட, பல்வேறு சுகாதார பணிகளில் மஸ்தூர் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கான ஊதியம் மற்ற மாவட்டங்களை காட்டிலும், கோவை மாவட்டத்தில் குறைவாக உள்ளது.
நாள் ஒன்றுக்கு, 350 ரூபாய்தான் வழங்கப்படுகிறது. குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட, அவசியம் ஊதிய உயர்வு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.