/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா ஆர்.இ.சி. புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா ஆர்.இ.சி. புரிந்துணர்வு ஒப்பந்தம்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா ஆர்.இ.சி. புரிந்துணர்வு ஒப்பந்தம்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா ஆர்.இ.சி. புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : ஆக 05, 2025 11:19 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா தொழிற் பயிற்சி நிறுவனத்தில் (ஐ.டி.ஐ.,) ரூ. 9.06 கோடி மதிப்பீட்டில் தொழில் நுட்ப கல்விக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அரியானா மாநிலம், குருகிராம் நகரில் உள்ள மத்திய அரசின் அங்கீகாரத்தை பெற்ற ஆர்.இ.சி., நிறுவனம், பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா தொழில் பயிற்சி நிறுவனத்தில் ரூ.9.06 கோடி மதிப்பீட்டில் பணிமனைகள், வகுப்பறைகள், சிறப்பு தொழில்நுட்ப கற்பித்தல் வசதிகளை ஏற்படுத்தி தர உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்வு வித்யாலயா வளாகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தா தலைமை வகித்தார். வித்யாலயா தொழில் பயிற்சி நிறுவன முதல்வர் முரளி வரவேற்றார். வித்யாலயா உதவி செயலாளர் சுவாமி தத்பாஷானந்தா பேசினார். ஆர்.இ.சி., நிறுவன சென்னை மண்டல முதன்மை செயல்பாட்டு அதிகாரி தாரா ரமேஷ், திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில், ஆர்.இ.சி., நிறுவனத்தின் இயக்குனர் நாராயணன் திருப்பதி பேசுகையில், ''உலக பொருளாதாரத்தின் உந்து சக்தியாக இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக உருவாகி வருகிறது. இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்கத்தை முன்னிறுத்தி, மத்திய அரசு உள்ளூர் தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது'' என்றார்.
விழாவில், ஆர்.இ.சி., நிறுவனத்தின் சமூக பங்களிப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் இமானுவேல் ஆண்டனி, வித்யாலயா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.