/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெரியநாயக்கன்பாளையத்தில் ராமானுஜர் திருநட்சத்திர திருவிழா
/
பெரியநாயக்கன்பாளையத்தில் ராமானுஜர் திருநட்சத்திர திருவிழா
பெரியநாயக்கன்பாளையத்தில் ராமானுஜர் திருநட்சத்திர திருவிழா
பெரியநாயக்கன்பாளையத்தில் ராமானுஜர் திருநட்சத்திர திருவிழா
ADDED : ஏப் 28, 2025 11:56 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் எம்பெருமானார் தர்சன ஐக்கிய சபா சார்பில் ராமானுஜர், 108வது திரு நட்சத்திர திருவிழா நடந்து வருகிறது.
விழாவையொட்டி கடந்த, 23ம் தேதி காலை, 8:00 மணிக்கு கொடியேற்றம், தொடர்ந்து மங்களகிரி வாகனம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, சூரிய பிரபை, சந்திர பிரபை, முத்து பந்தல் கோலத்தில் ராமானுஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நேற்று முன்தினம் இரவு சேஷ வாகனத்தில் ராமானுஜர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று, 29ம் தேதி அலங்கார பல்லக்கு, 30ம் தேதி சர்வ பூபால வாகனம், மே 1ம் தேதி ஸ்ரீ ராமானுஜர் ஆச்சார்யா விமானத்தில் புறப்பாடு, 2ம் தேதி ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் குதிரை தம்பிரான் பேரில் திருவீதி உலா, ராமானுஜர் புஷ்பா பல்லக்கில் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.