ADDED : டிச 25, 2024 10:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில்பாளையம்; தமிழகத்தைச் சேர்ந்த கணித மேதை சீனிவாச ராமானுஜர் பிறந்தநாள், ஒவ்வொரு ஆண்டும், தேசிய கணித நாளாக கொண்டாடப்படுகிறது.
அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, கோவை வித்யாஸ்ரம் பள்ளியில், ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு, மூன்று பிரிவுகளாக, 'மேத்ஸ் மேனியா' என்னும் கணிதப் போட்டி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் மூன்று பிரிவுகளிலும், முதல் மூன்று இடங்களை பெற்ற, மாணவ, மாணவியர் கவுரவிக்கப்பட்டனர். மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
ராமானுஜத்தின் கணித கண்டுபிடிப்புகள் குறித்து ஆசிரியைகள் பேசினர்.

